×

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது: சிபிஐ வாதம்!

காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கொலையில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது. இந்த வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ், முத்துராஜ் மற்றும்
 

காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்ட தந்தை மகன், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, கொலையில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது.

இந்த வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ், முத்துராஜ் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் சிறையில் இருக்கும் காவலர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ அனுமதி அளிக்கவில்லை. போலீசார் தாக்கியதால் தான் ஜெயராஜும் பென்னிக்ஸும் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு 5ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவலர் ஸ்ரீதரின் கவனத்துக்கு எட்டாமல் வழக்கு பதியப்படவில்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.