×

ஜகம் ஆளக் கூடிய ‘மகம்’ நட்சத்திரத்தின் பொதுப் பலன்கள்

மகம் நட்சத்திரத்தின் ராசி சூரியனின் சிம்ம ராசி ஆகும். அதனால் தான், மகம் ஜகம் ஆளும் என்கிற பழமொழி உருவானது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இசைத் தமிழில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் நீரில் மூழ்கிக் குளிப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். செல்வம் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள். தாய், தந்தை, குரு, கடவுள் ஆகியோரை வணங்கி வாழ்பவர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். நிர்வாகத் திறமை அதிகம் உடையவர்களாகவும், கல்வி
 

மகம் நட்சத்திரத்தின் ராசி சூரியனின் சிம்ம ராசி ஆகும். அதனால் தான், மகம்  ஜகம் ஆளும் என்கிற பழமொழி உருவானது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இசைத் தமிழில் வல்லவர்களாக இருப்பார்கள். மேலும் நீரில் மூழ்கிக் குளிப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். செல்வம் வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள். தாய், தந்தை, குரு, கடவுள் ஆகியோரை வணங்கி வாழ்பவர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். நிர்வாகத் திறமை அதிகம் உடையவர்களாகவும், கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உண்மையே பேசக் கூடியவர்களாக திகழ்வார்கள்.

மகம் நட்சத்திரக்காரர்களிடம் நியாயமான கோபமும், குணமும் ஒருங்கே அமைந்திருக்கும். எவ்வளவு கோபப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் மறந்து சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். குறைவாக தூங்குபவர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். சிற்றின்பத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். ஒருவரிடம் கைகட்டி வேலை பார்ப்பது இவர்களுக்கு பிடிக்காது. வெளிப்படையாகப் பேசுவார்கள். எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும்.