×

சைக்கிளுக்கு ஹெல்மெட்டா? அடபாவிங்களா.. என்னன்னே தெரியாம இஷ்டத்துக்கு பேசுறீங்களேடா: உண்மையை கூறிய போலீஸ்!

மாணவன், சட்டை பொத்தானைச் சரிசெய்யக் கையை விட்டு சைக்கிளை ஓட்டியதாகவும், அப்படி செய்யக் கூடாது தருமபுரி: ஹெல்மெட் அணியாததாதல் பள்ளி மாணவருக்கு அபராதம் விதித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதையடுத்து சம்மந்தப்பட்ட காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுப்பிரமணி என்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் தலைமையின் கீழ் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த பள்ளி மாணவனை பிடித்து ஹெல்மெட்
 

மாணவன், சட்டை பொத்தானைச் சரிசெய்யக் கையை விட்டு சைக்கிளை ஓட்டியதாகவும், அப்படி செய்யக் கூடாது

தருமபுரி: ஹெல்மெட் அணியாததாதல் பள்ளி மாணவருக்கு அபராதம் விதித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதையடுத்து சம்மந்தப்பட்ட காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுப்பிரமணி என்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் தலைமையின் கீழ் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியே சைக்கிளில் வந்த பள்ளி மாணவனை பிடித்து ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் கேட்டதாகவும், அவனது சைக்கிளை பறிமுதல் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த போலீசார், மாணவர் சைக்கிள் ஹேன்ட் பாரை பிடிக்காமல் இரு கைகளையும் விட்டு விட்டு வேகமாக சைக்கிள் ஓட்டியதால் அவரை எச்சரிக்கும் விதத்தில் பிடித்து வைத்ததாகக் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தன்னிலை விளக்கமளித்துள்ள அந்த மாணவன், சட்டை பொத்தானைச் சரிசெய்யக் கையை விட்டு சைக்கிளை ஓட்டியதாகவும், அப்படி செய்யக் கூடாது என்று தன்னை எச்சரித்து அனுப்பியதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் மாணவன் மீதே  தவறு என்று கூறியுள்ளனர்.

மாணவனுக்கு தனது தவறை சுட்டிக்காட்ட 1 மணி நேரம் காத்திருப்புக்குப் பின் அனுப்பிய அந்த  சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரை  ஒரே நாளில் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களின்  வாயிலாக தவறானவர் போல சித்தரித்தது என்பது வருத்தத்திற்குரியது.