×

சென்னையில் லஞ்ச வழக்கில் தாசில்தார் கைது!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அரசு ஊழியர்கள், தங்களது கடமையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்குவது அதிகரித்திருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. லஞ்சம் வாங்கும் வழக்குகளில் அதிரடியாய் சில அதிகாரிகள் சிக்கிக் கொண்டாலும், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடரத் தான் செய்கிறது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியத்திடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அரசு ஊழியர்கள், தங்களது கடமையைச் செய்வதற்கு
 
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அரசு ஊழியர்கள், தங்களது கடமையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்குவது அதிகரித்திருப்பதாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டிருந்தன. லஞ்சம் வாங்கும் வழக்குகளில் அதிரடியாய் சில அதிகாரிகள் சிக்கிக் கொண்டாலும், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடரத் தான் செய்கிறது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூரைச்  சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியத்திடம் வாரிசு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்தார். 

ரவிச்சந்திரனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்காக மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியன், ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ரவிச்சந்திரன் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று மயிலாப்பூர் தாசில்தார் சுப்பிரமணியனிடம் ரவிச்சந்திரன் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ரூ.10,000 லஞ்சம் கொடுத்தார். ரவிச்சந்திரனிடம் இருந்து லஞ்ச பணம் ரூ.10,000யை  பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனை கைது செய்தனர். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.