×

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மண்டலங்களில் களப்பணிக்குழு அமைப்பு- முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. இதேபோன்ற சிறப்புக்குழுக்கள் கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும். வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் கணக்கெடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவரவர் இடங்களுக்குச் சென்று உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் Containment Zone-ல் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும். எந்தெந்த தொழில்களை படிப்படியாக
 

முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. இதேபோன்ற சிறப்புக்குழுக்கள் கோவை, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும். வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அந்தெந்த மாவட்ட ஆட்சியர்கள் கணக்கெடுக்க வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவரவர் இடங்களுக்குச் சென்று உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் Containment Zone-ல் உள்ள வீடுகளில் மாஸ்க், சானிடைசர், 250 கிராம் கிருமி நாசினி பவுடர் வழங்கப்படும். எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கையாக அனுப்புங்கள். அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். மே மாதத்திற்கான ரேஷன் டோக்கன்களை நாள், நேரம் குறித்து வழங்க வேண்டும். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதி அமைக்கப்படும். நடமாடும் சோதனை வாகனங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் நோய் தொற்று சந்தேகப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று சோதனை செய்யும்” எனக்கூறியுள்ளார்.