×

சென்னையில் காற்று மாசு இருக்கா? இல்லையா?! : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதை போன்று சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதை போன்று சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் இன்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் உதய குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், ‘கட்டுமான பணி, வாகனப்
 

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதை  போன்று சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதை  போன்று சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் இன்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் உதய குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அதில், ‘கட்டுமான பணி, வாகனப் புகை உள்ளிட்ட பல காரணிகளால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தமாக 28 மாசுக் கட்டுப்பாடு தர நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டுமே 8 நிலையங்களும், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மற்ற மாசுக்கட்டுப்பாடு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காற்றின் மாசுபாட்டைக் கண்டறிய, 0-500 வரையிலான அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணிக்கை உயர உயர மாசுக் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது என்று கணக்கிடப்படும். 

இதுவரை சென்னையில் 2 இடங்களில் மட்டுமே மோசமான சூழல் நிலவி வருகிறது என்று வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் சேகரித்துள்ளார். இதனால் சென்னை முழுவதும் மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், இது குறித்து சுகாதாரத் துறையிடம் விசாரித்த போது, காற்று மாசுபாட்டால் ஏற்படும் மூச்சுத் திணறலின் காரணமாக இது வரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. காய்ச்சலால் ஏற்படும் மூச்சுத் திணறலால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெளிவாகச் சொல்கின்றனர். அதனால், சென்னையில் காற்று மாசுபாடு முழுமையாக ஏற்படவில்லை’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.