×

சென்னையில் கனமழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்!

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்குக் காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, மடிப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த
 

7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்தது. 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்குக் காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்தது. 

சென்னையைப்  பொறுத்தவரையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது. கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோயம்பேடு, மடிப்பாக்கம், மாங்காடு, வேளச்சேரி, குரோம்பேட்டை  உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகச் சாலைகளில் மழைநீர் ஆறுபோல ஓடுகிறது. 

இந்நிலையில்  சென்னையில் இன்று  வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.