×

சென்னையில் இன்று இரவு முதல் மே 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சீனாவில் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த வைரஸால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு முறையான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

சீனாவில் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த வைரஸால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு  முறையான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.  தமிழகத்தில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் அதிகம் பேர் சென்னையை சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றுமையமாக கோயம்பேடு சந்தை உள்ளது. ஊரடங்கு மே.17 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெளியில் நடமாடினர். இதன்விளைவாக பாதிப்பு தீவிரமடைந்தது. இதையடுத்து சென்னையில் மே. 17 ஆம் தேதி இரவு 12  வரை ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

 

 

இந்த உத்தரவின்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை நடைமுறைப்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.