×

சென்னையில் அமைந்துள்ள கொல்கத்தா காளி கோயிலில் களைகட்டிய தசரா கொண்டாட்டம்!

சென்னை சாமியார் மடம் காளி கோயில் தசரா திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு காளி தேவியை தரிசனம் செய்தனர். சென்னை சாமியார் மடம் கொல்கத்தா காளி கோயிலில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா கடந்த 5 நாட்களாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் விஜய தசமி தினமான இன்று உற்சவ தேவியாக வீற்றிருந்த காளி தேவிக்கு சிறப்பு துப,
 

சென்னை சாமியார் மடம் காளி கோயில் தசரா திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு காளி தேவியை தரிசனம் செய்தனர்.  

சென்னை சாமியார் மடம் கொல்கத்தா காளி கோயிலில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான  நவராத்திரி விழா கடந்த 5 நாட்களாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் விஜய தசமி தினமான இன்று உற்சவ தேவியாக வீற்றிருந்த காளி தேவிக்கு சிறப்பு துப, தீப, ஆராதனைகள் நடைபெற்றது. 

 

 

 

இந்நிகழ்வில் சென்னையில் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் பெங்காலி மக்களும் அதிக அளவில் கலந்துகொண்டு காளி தேவியை தரிசனம் செய்தனர்.இதனை அடுத்து காளி தேவியை வழியனுப்பும் நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன், கோலாகலமாக நடைபெற்றது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக காளி தேவியின் உற்சவ உருவத்தினை சென்னை திருவான்மியூர் கடற்கரையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கரைக்கபட உள்ளது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காளி தேவியை வழிபாடு செய்தனர்.