×

சென்னைக்கு வந்த சீன அதிபருக்குத் தமிழக அரசு சார்பில் பலத்த வரவேற்பு..!

மாமல்லபுரம் செல்லும் பகுதியில் 90 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். சீன அதிபரை வரவேற்று சென்னை முழுவதும் டிஜிட்டல் பலகைகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாமல்லபுரம் செல்லும் பகுதியில் 90 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுக்
 

மாமல்லபுரம் செல்லும் பகுதியில் 90  மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். சீன அதிபரை வரவேற்று சென்னை முழுவதும் டிஜிட்டல் பலகைகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாமல்லபுரம் செல்லும் பகுதியில் 90  மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என 500 கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இன்று காலையிலேயே நரேந்திர மோடி சென்னைக்கு வந்ததையடுத்து, சீன அதிபர் ஜின்பிங் சென்னை விமானம் நிலையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு மேள தாளங்கள் முழங்க, தமிழக அரசு சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபா நாயகர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். 

சென்னைக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங் இன்று மாலை, கோவளத்தில் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். அதனையடுத்து, நாளை மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.