×

சென்னை கடற்கரையில் மோடியின் கையில் இருந்த கருவி இதுதானாம்!

மோடி கையில் கருவி ஒன்று இருந்தது. அது என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. புதுடெல்லி: மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி தான் கையில் வைத்திருந்த கருவி குறித்து விளக்கமளித்துள்ளார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் – பிரதமர் மோடியின் சந்திப்பு நேற்றுடன் முடிந்தது. இரண்டு நாட்கள் பயணமான சென்னை வந்த இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களைப் பார்வையிட்டனர். இதையடுத்து கோவளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரதமர் மோடி தங்கினார். நேற்று
 

மோடி கையில் கருவி ஒன்று இருந்தது. அது என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

புதுடெல்லி:  மாமல்லபுரம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி தான் கையில் வைத்திருந்த கருவி குறித்து விளக்கமளித்துள்ளார். 

மாமல்லபுரத்தில் சீன அதிபர் – பிரதமர் மோடியின் சந்திப்பு நேற்றுடன்  முடிந்தது.  இரண்டு நாட்கள்  பயணமான சென்னை வந்த  இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தின் புராதான  சின்னங்களைப் பார்வையிட்டனர். இதையடுத்து கோவளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரதமர் மோடி தங்கினார்.

நேற்று காலை கோவளம் கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த குப்பைகளை கைகளால் எடுத்து, பின்னர் அதை ஒன்றாக சேர்த்து அங்கிருந்த ஓட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது மோடி கையில் கருவி ஒன்று இருந்தது. அது என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தான் கையில் வைத்திருந்த கருவி என்னவென்று விளக்கமளித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்றிலிருந்து பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர், அது நான் மாமல்லபுர கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கையில் வைத்திருந்த கருவி என்ன என்பதுதான். அந்தக் கருவியின் பெயர் acupressure roller, இது எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.