×

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா உறுதி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது உணவகங்கள் செயல்படலாம் என்றும் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கிட்டதட்ட 45 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழக மாவட்டங்களை பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பச்சை மண்டலங்களில் 50% தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில்,
 

ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது உணவகங்கள் செயல்படலாம் என்றும் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

தமிழகத்தில் கிட்டதட்ட 45 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தமிழக மாவட்டங்களை பச்சை, சிவப்பு, மஞ்சள் என மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பச்சை மண்டலங்களில் 50% தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களில் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. 

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் என மக்கள் அதிகாமாக கூடும் இடங்கள் மூடப்பாட்டன. ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது உணவகங்கள் செயல்படலாம் என்றும் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து அந்த உணவகம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த உணவகங்களுக்கு சென்ற மக்களுக்கும் கொரோனா பரவியிருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பீதியில் இருக்கும் சென்னை மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.