×

சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி –  முதலமைச்சர் பழனிசாமி

சுர்ஜித்தை இழந்துவாடும் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். சுர்ஜித்தை இழந்துவாடும் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாகச் சிறுவனை மீட்கப்
 

சுர்ஜித்தை இழந்துவாடும் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

சுர்ஜித்தை இழந்துவாடும் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். 

மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாகச் சிறுவனை மீட்கப் போராடிய மீட்புக் குழு, இன்று காலை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் மீட்டது. சுர்ஜித்தின் மரணம், அவனுக்காகப் பிரார்த்தித்த அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின், நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுர்ஜித்தின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, சுர்ஜித்தின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் அரசு சார்பில் அவர்களது குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.