×

சுர்ஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது  மனதை  உலுக்குகிறது: டிடிவி தினகரன் வேதனை!

கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. குழந்தை சுர்ஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது மனதை உலுக்குகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. உடல் சற்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட
 

கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

குழந்தை சுர்ஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது  மனதை  உலுக்குகிறது என்று அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி  தினகரன் தெரிவித்துள்ளார். 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  80 மணி நேரத்திற்கும் அதிகமான இந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது. உடல் சற்று சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு  பிரேத பரிசோதனை முடிந்தது. தற்போது  கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள உடல் இறுதி சடங்கிற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 

 

இந்நிலையில் சுர்ஜித்தின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘எப்படியாவது நலமுடன்  வந்துவிடுவான்  என்று அனைவரும்  எதிர்பார்த்த குழந்தை சுஜித் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது  மனதை  உலுக்குகிறது.  குழந்தையை இழந்திருக்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகளால் முடியாது’ என்றும் மற்றொரு பதிவில், ‘ஆழ்துளை  குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்துத் தரப்பினரும் இனியாவது கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.