×

சுர்ஜித் உடலுடன் செல்பி எடுத்த நபர்! 

சிறுவன் சுர்ஜித்தை அடக்கம் செய்யும் போது அங்கு சிலர் செல்பி எடுத்த விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. சிறுவன் சுர்ஜித்தை அடக்கம் செய்யும் போது அங்கு சிலர் செல்பி எடுத்த விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான். 5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித்
 

சிறுவன் சுர்ஜித்தை அடக்கம் செய்யும் போது அங்கு சிலர் செல்பி எடுத்த விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. 

சிறுவன் சுர்ஜித்தை அடக்கம் செய்யும் போது அங்கு சிலர் செல்பி எடுத்த விவகாரம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்கு முடிவுற்றபின் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கடந்த சில நாட்களாக 88 அடி குழிக்குள் இருந்த சுர்ஜித் மேலும் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவரது கைகள் ஏர்லாக் மூலம் பிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுர்ஜித் மீட்கப்பட்டவுடன் அவரது முகம் மற்றும் உடல்கள் யாருக்கும் காட்டப்படவில்லை. குழந்தையின் இழப்பிற்கு தமிழகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சுர்ஜித்தின் உடல் அடக்கம் செய்யப்படும்போது அங்கு சிலர் செல்பி எடுத்துள்ளனர். இதைக்கண்ட பலர் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். எங்கே செல்பி எடுக்க வேண்டும் என விவஸ்தை இல்லையா? என்ற கேள்விகளையும் எடுத்துவருகின்றனர்.