×

சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: காவல் துறை

ஜெயகோபால் மீது 308 விதியின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ளத்தால் அவரை சிசிடிவி கேமரா மூலம் சிறப்புப் படையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன சில நாட்களுக்கு முன்னர் சுபஸ்ரீ என்ற பெண் பேனர் தவறி விழுந்ததில் லாரி மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை
 

ஜெயகோபால் மீது 308 விதியின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ளத்தால் அவரை சிசிடிவி கேமரா மூலம் சிறப்புப் படையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

சில நாட்களுக்கு முன்னர் சுபஸ்ரீ என்ற பெண் பேனர் தவறி விழுந்ததில் லாரி மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியது.

 

இது தொடர்பாக பரங்கி மலை காவல்துறை இணை ஆணையர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ஜெயகோபால் மீது 308 விதியின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ளத்தால் அவரை சிசிடிவி கேமரா மூலம் சிறப்புப் படையினர் கண்காணித்து வருவதாகவும், அவரது தொலைபேசி இயக்கத்தில் இல்லாததால் அவரது உறவினர்களின் தொலைபேசியை கண்காணித்து விரைவில் அவரை கைது செய்வோம் என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன