×

சுடுகாடும் இல்ல… அணையும் இல்ல… இடுப்பளவு நீரில் இறுதி ஊர்வலம்

வேலூர் மாவட்டம் அனைக்கட்டு ஒன்றியம் சேர்பாடி கிராமத்தில் சூடுகாடு வசதிகள் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்று இறுதிச்சடங்கு நடத்தும் கொடுமை அரங்கேறிவருகிறது. நவீன காலத்தில் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் எத்தனையோ சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும், மேலூர் மாவட்டம் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தில் சுடுகாடு இல்லை. அதுமட்டுமின்றி ஆற்றை கடந்து செல்ல பாலமோ, பாதையோ இல்லாதது அதைவிட வேதனை. ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து சென்று இறுதி ஊர்வலம்
 

வேலூர் மாவட்டம் அனைக்கட்டு ஒன்றியம் சேர்பாடி கிராமத்தில் சூடுகாடு வசதிகள் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்று இறுதிச்சடங்கு நடத்தும் கொடுமை அரங்கேறிவருகிறது. 

நவீன காலத்தில் நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் எத்தனையோ சமூக நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும், மேலூர் மாவட்டம் அருகே உள்ள சேர்பாடி கிராமத்தில் சுடுகாடு இல்லை. அதுமட்டுமின்றி ஆற்றை கடந்து செல்ல பாலமோ, பாதையோ இல்லாதது அதைவிட வேதனை. ஆற்றில்  தண்ணீர் வந்துவிட்டால் இடுப்பளவு தண்ணீரில் கடந்து சென்று  இறுதி ஊர்வலம் செய்யும்  அவலநிலை  தொடர்ந்து வருவதாகவும், இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் மற்றும் சுடுகாட்டிற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் இந்த அவலம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். வாழ்ந்து முடித்த மனிதனை இறுதிநாளில் கூட இங்கு நிம்மதியாக அடக்கம் செய்ய முடியவில்லை எனவும் புலம்புகின்றனர்.