×

சீன அதிபர் சென்னை வருகை: சிறிது நேரம் நிறுத்தப்படும் ரயில்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று மற்றும் நாளை (அக்12) ஆகிய தேதிகளில் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை
 

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வருகையையொட்டி கிண்டி வழித்தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று  மற்றும் நாளை (அக்12) ஆகிய தேதிகளில் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சீன அதிபருக்கு   உற்சாக வரவேற்பு அளிப்பதுடன்   கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்க்கவுள்ளனர். 

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பினால்  சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம், மாமல்லபுரம் சுற்று வட்டாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை, ஐடி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிசெய்ய அறிவுறுத்தல் என சென்னை போலீசார் பாதுகாப்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங் இன்று  சென்னை வரும்போது கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புறநகர், விரைவு ரயில்கள் பல்லாவரம் பகுதியில் சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்படும் என்றும் தெரிகிறது. தமிழக அரசின்  உத்தரவின் பேரில் சில ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.