×

சீன அதிபர், இந்தியப் பிரதமர் வருகை: வரவேற்கும் பணி தீவிரம்….

சென்னையின் பிரதான சாலைகளான கிண்டி, மத்திய கைலாஷ், தரமணி, அடையாறு உள்ளிட்ட சாலைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை நடத்த மாமல்லபுரத்திற்கு வரவிருக்கின்றனர். அவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. நேற்று, முன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்தில்
 

சென்னையின் பிரதான சாலைகளான கிண்டி, மத்திய கைலாஷ், தரமணி, அடையாறு உள்ளிட்ட சாலைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. 

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை நடத்த மாமல்லபுரத்திற்கு வரவிருக்கின்றனர். அவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுப் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. நேற்று, முன் தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்தில்  நடைபெறும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

 

இந்நிலையில், அக்டோபர் 11 ஆம் தேதி இரு நாட்டின் தலைவர்களையும் வரவேற்க, சென்னையில் உள்ள முக்கிய சாலைகளைப் புதுப்பித்து, வர்ணம் பூசும் பணி நேற்று  நள்ளிரவிலிருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையின் பிரதான சாலைகளான கிண்டி, மத்திய கைலாஷ், தரமணி, அடையாறு உள்ளிட்ட சாலைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.