×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத தேரோட்டம்!

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரம் : பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலாமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும்
 

சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் : 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலாமாக விளங்குவது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

இந்தாண்டிற்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 14 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு முதல் நாள் இக்கோயிலில் தேரோட்டம் நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது .

இவ்விழாவில் நாளை அதிகாலை 5 மணிக்கு  நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியே தேரில் எழுந்தருள்வார்கள். 

அதன் பின்னர் பக்தர்கள் தேர்களின் வடத்தை பிடித்து இழுப்பார்கள். இதற்காக 5 தேர்களும் கிழக்கு வீதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு, அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் கோயில் பொதுதீட்சிதர்கள் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.