×

சிதம்பரம் நடராஜரை தரிசித்து கலைத்துறையில் உச்சம் தொடுவோம்!

சிதம்பரத்தில் நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை. ஆருத்ரா தரிசனம் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயில் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்நாளில் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் தான் தில்லையில் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது ஆகும். திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன்
 

சிதம்பரத்தில் நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை.

ஆருத்ரா தரிசனம் என்றாலே  சிதம்பரம்  நடராஜர் கோயில் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்நாளில் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இந்நாளில் தான் தில்லையில் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார். இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.  

இவ்விழாவினை பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

ஆருத்ரா தரிசன நாளில் விரதம் இருந்து  சிதம்பரம் நடராஜரை வழிபாடு செய்வதால் நமது பாவங்கள் விலகி புண்ணியங்களையும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கொண்டால் நடன கலையில் சிறந்து விளங்கலாம் .