×

சிக்கல் சிங்கார வேலவர் கோயில் கந்த சஷ்டி விழா : மூலவர் முகத்தில் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வினை காண்பதற்கு பக்தர்கள் ஆர்வம்!

சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்கார விழா வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறுகிறது. நாகை மாவட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோயில் அமைந்துள்ளது .சூரனை வதம் செய்ய நெடுவேல்கண்ணியிடம் ஆவேசமாக சக்திவேலை சிங்கார வேலவர் வாங்கியதால் அவரது முகத்தில் வியர்வை அரும்பியதாகவும் திருச்செந்தூர் முருகனே இங்கு வந்து நெடுவேல் கண்ணியிடம் சக்திவேல் வாங்கியதாகவும் கோயிலின் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. இதைதொடர்ந்து
 

சிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்கார விழா வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோயில் அமைந்துள்ளது .சூரனை வதம் செய்ய நெடுவேல்கண்ணியிடம் ஆவேசமாக சக்திவேலை சிங்கார வேலவர் வாங்கியதால் அவரது முகத்தில் வியர்வை அரும்பியதாகவும் திருச்செந்தூர் முருகனே இங்கு வந்து நெடுவேல் கண்ணியிடம்  சக்திவேல் வாங்கியதாகவும் கோயிலின் தல புராணம் கூறுகிறது. 

இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. இதைதொடர்ந்து நேற்று காப்பு கட்டுதல்,சிங்கார வேலவர் தங்க மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார் .

இதனைஅடுத்து இன்று இரவு 7 மணிக்கு பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இதனைஅடுத்து சிங்கார வேலவர் மோகனாவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிகிறார். அதனையடுத்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

இக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்ச்சி வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறுகிறது. வருகின்ற 13 ஆம் தேதி காலை 5 மணிக்கு கந்த சஷ்டி விழாவையொட்டி சிங்கார வேலவர் தேரோட்டம் நடைபெற உள்ளது.அதனையடுத்து இரவு 7.30 மணிக்கு தேரிலிருந்து கோயிலுக்கு சிங்காரவேலவர் எழுந்தருள் வார்.

 

அதனை தொடர்ந்து நெடுவேல்கண்ணியிடம் சிங்கார வேலவர் சக்திவேலை வாங்கும் நிகழ்வும். அதனையடுத்து கருவறையில் சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

இந்த அபிஷேக ஆராதனை நிகழ்வின் பொழுது சிங்கார வேலவர் முகத்தில் வியர்வை அரும்பும் இந்த அற்புத காட்சியை பார்பதற்கு பக்தர்கள் கூட்டம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்து சிங்கார வேலனை தரிசனம் செய்கின்றனர்.

இதனை அடுத்து இரவு 7 மணிக்கு இந்திர விமானத்தில் வீதியுலா நடைபெறுகிறது. சூரசம்கார நிகழ்ச்சிக்கு அடுத்த நாள் காலை 7 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

அதனையடுத்து மாலை 4 மணிக்கு பாலசிங்கார வேலவர் தங்க குதிரை வாகனத்தில் பவனியும், இரவு 7 மணிக்கு தெய்வசேனை திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் பவனி நடைபெறுகிறது.இதனைஅடுத்து சயன அலங்காரமும், விடையாற்றியும் நிகழ்வும் நடைபெறுகிறது.