×

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும்- உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் கடையை கூடுதலாக 5 நிமிடம் திறந்து வைத்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடுமையாக தாக்கிய சாத்தான்குளம் போலீஸார், சிறையில் அடைத்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் தந்தை, மகன் இறந்துவிட்டனர். இந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி இந்திய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை தேவை. முறையாக விசாரிக்கவில்லை எனில் சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு தொடரும். ‘ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள்’ என நினைக்காதீர்கள். முதலமைச்சர் பழனிசாமி அவர்களே. அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்!” எனக் கூறியுள்ளார்.