×

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் கடத்தல்: கணவன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது வழக்கு!

வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வனும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஈஸ்வரன் என்பவரின் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது
 

 வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு  இருந்துள்ளது.  

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கவுந்தபாடியை சேர்ந்த செல்வனும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியில் வசிக்கும் இளமதி  என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் இவர்கள்  வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு  இருந்துள்ளது.  

 

இதையடுத்து நேற்று  முன்தினம் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஈஸ்வரன் என்பவரின் முன்னிலையில்  சுயமரியாதை  திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த சுமார் 40 ற்கும் மேற்பட்டோர் அங்கிருந்தவர்களைத் தாக்கினர். ஈஸ்வரன், செல்வன் மற்றும் இளமதி ஜோடியை அடித்து காரில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட  நிலையில் போலீசார் செல்வன் மற்றும் ஈஸ்வரனை  மீட்டனர். தொடர்ந்து இளமதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காதல் ஜோடியை கடத்தியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என   திராவிடர் விடுதலை கழகத்தினர் கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பிடிபட்ட 18 பேர் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,  மணப்பெண் இளமதியையும் தேடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.