×

சவாரிக்கு அழைத்து காரைக் கடத்திய கும்பல் கைது!|தலைவிரித்தாடும் கடத்தல் கலாசாரம்!

ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்கு என்று அந்த வீட்டில் ஐந்து வாகனங்களாவது இருக்கின்றன. அப்படி வாகனங்கள் பெருகியிருந்தாலும், இன்னமும் ஆட்டோக்களிலும், கார்களிலும் பவனி வருவதையே மக்கள் விரும்புகின்றனர். நிறைய வாடகை கார்கள் தமிழகம் முழுவதும் பெருகி விட்ட காரணத்தினால், வாகனங்களைக் கடத்துபவர்கள் இப்போதெல்லாம் வாடகைக் கார்களையே அதிகமாக குறி வைத்து கடத்துகிறார்கள். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்கு என்று அந்த வீட்டில் ஐந்து வாகனங்களாவது இருக்கின்றன. அப்படி வாகனங்கள்
 
ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், அவர்கள் பயன்படுத்துவதற்கு என்று அந்த வீட்டில் ஐந்து வாகனங்களாவது இருக்கின்றன. அப்படி வாகனங்கள் பெருகியிருந்தாலும், இன்னமும் ஆட்டோக்களிலும், கார்களிலும் பவனி வருவதையே மக்கள் விரும்புகின்றனர். நிறைய வாடகை கார்கள் தமிழகம் முழுவதும் பெருகி விட்ட  காரணத்தினால், வாகனங்களைக் கடத்துபவர்கள் இப்போதெல்லாம் வாடகைக் கார்களையே அதிகமாக குறி வைத்து கடத்துகிறார்கள். 

அப்படியான ஒரு சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. கடந்த வியாழனன்று திருச்சிக்கு அருகே உப்பிலியாபுரம் கார் ஸ்டேண்டுக்குச் சென்ற 3 பேர் கொண்ட கும்பல், முபாரக் அலி என்பவரது டாடா இண்டிகா காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். துறையூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி  காரில் ஏறிய அவர்கள், சிறிது தூரம் சென்றதும் முசிறி செல்ல வேண்டும் எனக் கூறி மணல்மேடு அருகே ஆளரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் மேலும் இருவர் சேர்ந்துக் கொண்டு முபாரக் அலியை தாக்கி விட்டு காரை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

காரைப் பறிகொடுத்த முபாரக் அலி கொடுத்த தகவலின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் விசாரணையில் இறங்கிய நிலையில், கடத்தல் பேர்வழிகள் காரின் பதிவு எண் பலகையை கழற்றி விட்டு அரவக்குறிச்சியிலுள்ள ஸ்டிக்கர் கடை ஒன்றில் கொடுத்து ஸ்டிக்கர் ஒட்டக் கூறியுள்ளனர். சந்தேகமுற்ற கடைக்காரர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கவே, அங்கு வந்த போலீசார் விஜயகுமார், பெருமாள், ஜெகன், செந்தில்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.