×

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஓனர் சிவாஅருள்துரையிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! துப்பாக்கிகளுடன் கைதான 10 பேர்!

இந்த விஷயத்தை நான் வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடையில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் 3 சவரன் தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார். நகையை வாங்கிய தனசேகரன் கடையில் உள்ள கழிவறைக்குச் சென்று வந்தவுடன், தங்க நகையில் பூசியுள்ள முலாம் உதிர்வதாகவும், உங்கள் கடையில் போலி நகைகள் விற்கிறீர்களா என்று
 

இந்த விஷயத்தை நான் வெளியே சொல்லாமல்  இருக்க வேண்டும் என்றால் எனக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். 

சென்னை தியாகராய நகரில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடையில், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் 3 சவரன் தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார். நகையை வாங்கிய தனசேகரன் கடையில் உள்ள கழிவறைக்குச் சென்று வந்தவுடன், தங்க நகையில் பூசியுள்ள முலாம் உதிர்வதாகவும், உங்கள் கடையில் போலி நகைகள் விற்கிறீர்களா என்று கடையிலிருந்த மேனேஜரிடமும் கடையில் வேலை செய்பவர்களிடமும் பிரச்சனை செய்துள்ளார்.

அது மட்டுமின்றி, இந்த விஷயத்தை நான் வெளியே சொல்லாமல்  இருக்க வேண்டும் என்றால் எனக்கு 15 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தான் ஒரு பத்திரிகையாளர் அதனால் உங்கள் கடையை அசிங்கப் படுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 

இதனால் மிரண்டு போன மேனேஜர் அவரிடம் 15 லட்சம் ரூபாயைக் கொடுத்து கடையிலிருந்து அனுப்பியுள்ளார். கடையில் இருந்து சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் தனசேகரன் அவரது நண்பர்கள் 10 பேருடன் சென்று 1 கோடி ரூபாய் கொடுக்கும் படி மிரட்டியுள்ளார்.

அதனையடுத்து, கடையில் வேலை செய்பவர்கள் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பின் கடைக்கு வந்த காவல்துறையினர் அந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணை மேற்கொள்ளும் போதே, தனசேகருடன் வந்த 6 பேர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர். 

அதன் பின்னர், தனசேகரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கழிவறைக்குச் சென்ற பின்னர் அவர் வாங்கியதை போலவே போலி நகை ஒன்றில் முலாம் நீக்கும் பொடியை பூசி நாடகம் நடத்தியதும் அவர் உண்மையான பத்திரிகையாளர் இல்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து, தனசேகரையும் அவரது நண்பர்களான அரசியல் பிரமுகர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தனசேகரிடம் இருந்து ஊடகம் சார்ந்த போலி அடையாள அட்டைகளையும், அவரின் நண்பரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.