×

“சமைத்து உணவு வழங்க வேண்டாம்; அரிசி, பருப்பு கொடுங்கள்” : தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி நிபந்தனை!

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா ஊரடங்கு உத்தரவை அடுத்து முடங்கியுள்ளது. 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர்களுக்குத் தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும் உணவினை அளித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சென்னை மாநகராட்சி சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதில், சமைத்து உணவு வழங்கத் தடை விதித்துள்ளது.
 

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்தியா ஊரடங்கு உத்தரவை அடுத்து முடங்கியுள்ளது.  21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர்களுக்குத் தனியார் நிறுவனங்களும்,  தன்னார்வலர்களும்  உணவினை அளித்து வருகிறார்கள். இவர்களுக்குச் சென்னை  மாநகராட்சி சில கோரிக்கைகளை வைத்துள்ளது. அதில், சமைத்து உணவு வழங்கத் தடை விதித்துள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், முகக்கவசங்கள், சானிட்டரி நாப்கின்ஸ், கிருமி நாசினி, சாம்பார், ரசப்பொடி, உணவுப்பொருட்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளது.  மேலும் உதவி செய்ய விரும்புவோர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெஜெ விளையாட்டு அரங்கம், அண்ணா நகர் கிழக்கில் உள்ள அம்மா அரங்கத்தில் பொருட்களை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பாக உணவு அளிக்க வேண்டுமென்பதால் தான் இந்த விதிமுறைகளை மாநகராட்சி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.