×

சமூக விரோத கூடாரமாகும் பள்ளிக்கூடம்! மீட்டு தாருங்கள் என 6 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் என்பவருடைய ஆறு வயது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் என்பவருடைய ஆறு வயது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், கல்வி கற்க ஏற்ற சூழ்நிலையில் இல்லை என்றும், சமூக விரோத கூடாரமாகவும்,
 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் என்பவருடைய ஆறு வயது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் என்பவருடைய ஆறு வயது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அதிகை முத்தரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதில், கல்வி கற்க ஏற்ற சூழ்நிலையில் இல்லை என்றும், சமூக விரோத கூடாரமாகவும், சுகாதாரமின்றி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் இந்த புகார் குறித்து பல முறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் மனுவில் சுட்டுக்காட்டிந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அக்டோபர் 16 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து. இதையடுத்து பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ரவி, மீஞ்சூர் ஒன்றிய ஆணையர் கௌரி, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மீஞ்சூர் ஒன்றிய ஆணையர் கௌரி தெரிவித்துள்ளார்.