×

சனீஸ்வரன் வழிபாடு சகல நன்மைகள் தரும் வழிபாடு!

சனீஸ்வரன் பொதுவாக நீதிமான் மற்றும் நியாயவாதி என்றெல்லாம் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார் சனி கிரக தோஷ நிவர்த்தி பரிகாரங்களை பற்றி இந்த பதிவில் பார்போம். சனீஸ்வரன் பொதுவாக நீதிமான் மற்றும் நியாயவாதி என்றெல்லாம் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு.பொதுவாக சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேரில் நின்று வழிபடுவதைக்
 

சனீஸ்வரன் பொதுவாக நீதிமான் மற்றும் நியாயவாதி என்றெல்லாம் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார்

சனி கிரக தோஷ நிவர்த்தி பரிகாரங்களை பற்றி இந்த பதிவில் பார்போம்.

 

சனீஸ்வரன் பொதுவாக நீதிமான் மற்றும் நியாயவாதி என்றெல்லாம் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறார். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். 

 

கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு.பொதுவாக சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேரில் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும்.

 

 

எனவே தான் சனியை சாய்வாய் நின்று வழிபடு என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். சனீஸ்வரனை வழிபாடு செய்து சகல தோஷங்கள் நீங்குவதற்கு கீழ் கண்ட முறையில் வழிபாடுகள் செய்வது உத்தமம்.  இவ்வாறு செய்வதால்  சனிபகவானின் பரி பூரண அருள் நமக்கு கிடைக்கும். 

 

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

 

2. சனிக்கிழமை தோறும்  சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

 

 

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

 

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

 

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

 

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

 

 

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும்.அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

 

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

 

 

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

 

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

 

11. கோமாதா பூஜை செய்யலாம்.

 

 

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம்,படிப்பு செலவுக்கு உதவலாம்.

 

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

 

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

 

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

 

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு,விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

 

 

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும்.இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

 

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

 

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

 

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.