×

சந்திரனின் நட்சத்திரம் – ரோகிணி நட்சத்திர பொதுப் பலன்கள்

சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரம் ரோகிணி ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வித்தையையும் விரிவாக கற்றுக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மோர், பழரசம், இளநீர், பசும்பால் ஆகிய பானங்கள் விருப்பமானதாக இருக்கும். இவர்களுக்கு கார வகைகள் என்றால் அலர்ஜி. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவராகவும், பசியில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பவராகவும் இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவராகவும், ஸ்திர புத்தியுடையவராகவும் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்பும்
 

சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரம் ரோகிணி ஆகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வித்தையையும் விரிவாக கற்றுக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு மோர், பழரசம், இளநீர், பசும்பால் ஆகிய பானங்கள் விருப்பமானதாக இருக்கும். இவர்களுக்கு கார வகைகள் என்றால் அலர்ஜி. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவராகவும், பசியில் இருப்பவர்களுக்கு உணவு அளிப்பவராகவும் இருப்பார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகானவராகவும், ஸ்திர புத்தியுடையவராகவும் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்பும் இவர்கள் அதிர்ந்து பேச மாட்டார்கள். தெளிந்த அறிவு, நுட்பமான மதி ஆகியவற்றின் துணையுடன் எந்தவொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இவர்களது செயல்கள் அமையும். எப்போதும் நேர்மையாகவும், பேச்சில் ஒளிவு மறைவு இல்லாமலும் இருப்பார்கள்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள். எப்போதும் கற்பனை உலகில் உலவிக் கொண்டிருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவிதை, கட்டுரை, கதை, நாடகம் ஆகியவற்றை எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாக இருக்கும்.