×

சண்டே மெட்ரோ ரயிலில் போனா ஆஃபர் இருக்கா? என்னப்பா சொல்லுறீங்க!?

விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது சென்னை : பயணிகளின் வருகையை அதிகரிக்க ஞாயிற்றுக் கிழமைகளில் 50 சதவீத கட்டண சலுகையை அளிக்கச் சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை கவருவதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சென்னை மெட்ரோவில் வார நாட்களில் ஒருநாளைக்கு 1.15- 1.20 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் நிலையில் ஞாயிற்றுக்கிழமையில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம்
 

விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்பட்டது

சென்னை : பயணிகளின்  வருகையை அதிகரிக்க ஞாயிற்றுக் கிழமைகளில்  50 சதவீத கட்டண சலுகையை அளிக்கச் சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை கவருவதற்காக பல்வேறு சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  சென்னை மெட்ரோவில் வார நாட்களில்  ஒருநாளைக்கு  1.15- 1.20 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் நிலையில் ஞாயிற்றுக்கிழமையில்  60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர்களே  பயணம் செய்கின்றனர். 

இந்நிலையில் பயணிகளின்  வருகையை அதிகரிக்க ஞாயிற்றுக் கிழமைகளில்  50 சதவீத கட்டண சலுகையை அளிக்க சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பொது விடுமுறை நாட்களிலும் அளிக்கலாம் என்றும்   ஒரு குறிப்பிட்ட மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு இந்த சலுகையைப் பின்பற்றலாம் என்று ஆலோசித்து   வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்கான  கட்டண விபரத்துடன்  விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.