×

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை!

கடந்த 3 ஆம் தேதி கோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 31 வயது கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4 மாதங்களாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெரியவர்கள்,சிறியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பெருந்தொற்றாக அறிவித்துள்ள அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்
 

கடந்த 3 ஆம் தேதி கோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 31 வயது கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வகை கொரோனா வைரஸால் லட்ச கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கிட்டத்தட்ட 4 மாதங்களாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெரியவர்கள்,சிறியவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரையும் தாக்கி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பெருந்தொற்றாக அறிவித்துள்ள அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பின்னர், சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கோயம்பத்தூரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையான இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் கடந்த 3 ஆம் தேதி கோவை, கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 31 வயது கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதனால் குழந்தைக்கும் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் மருத்துவர்கள் இருந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.