×

கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த 4 பேருக்கு கொரோனா!

மே 18 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் மே 18 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய
 

மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144  தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144  தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8718ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில்  4,882  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.