×

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா- அமைச்சர் சேகர் பாபு

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு இந்து சமைய அறநிலைய துறையின் சட்டத்திற்கு உடப்பட்டு பட்டா வழங்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, “ஆர்ட் ஆஃப்
 

கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு இந்து சமைய அறநிலைய துறையின் சட்டத்திற்கு உடப்பட்டு பட்டா வழங்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, “ஆர்ட் ஆஃப் லிவ்விங் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாநகராட்சி இடம் கொடுக்கப்பட்டது. தமிழக அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நாள் ஒன்றுக்கு 4000 , 5000 மாக இருந்த கொரோனாவை தற்போது 400,500 ஆக குறைத்துள்ளது. சென்னையில் தினமும் 1 டன் கழிவு மட்டுமே அகற்ற பட்டு வந்த நிலையில் தீவிர தூய்மை திட்டத்தின் கீழ் தற்போது 250 மெட்ரிக் டன் கடந்த ஒரு வாரத்தில் அகற்றப்பட்டுள்ளது. மழைக்காலம் வருவதால் அனைத்து கால்வாய் சுத்தம் செய்யபட்டு வருகிறது.

3 வது அலைக்கு 8000 மேற்பட்ட ஆக்சிஜன் செறியூட்டிகளுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளியவர்களை வாடகைதாரர்கள் ஆக முதலில் மாற்றி, இந்து அறநிலையத்துறையின் 78வது சட்டத்தின்படி அவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை வாடகைதாரர்கள் ஆக மாற்றி அதன் பின்பு காலப்போக்கில் பட்டா வழங்கப்படும்” என தெரிவித்தார்.

கொரோனா பரிசோதனையில் தமிழக அரசு குளறுபடி செய்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததற்கு பதிலளித்த அவர், குளறுபடி அதிமுக கட்சியில் உள்ளது ,எடப்பாடி இடம் உள்ளது, தமிழக அரசு தற்போது அனைத்திலும் வெளிப்படையாகவே உள்ளது என பதிலளித்தார்.