×

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு.. 20 பேர் கைது!

அப்பல்லோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். நரம்பியல் நிபுணரான அவருக்கு வயது 55. சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பல்லோவில் தீவிர
 

அப்பல்லோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். 

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். நரம்பியல் நிபுணரான அவருக்கு வயது 55. சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக, டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பல்லோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். 

இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்படும் போது, அதனை அறிந்த மக்கள் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அவரது உடல் அண்ணாநகர் வேலங்காடு இடுகாட்டில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரமும் நெல்லூர் மருத்துவர் உயிரிழந்த போதும், இதே போல மக்கள் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மருத்துவரின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரவித்த 20 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.