×

‘கொரோனாவால் 12 பேர் இறந்துட்டாங்க’.. தங்களுக்கு லீவ் விட வேண்டும் என்பதற்காக வதந்தி பரப்பிய 2 பேர் கைது!

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 203க்கும் மேற்பட்டோர் பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை
 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 203க்கும் மேற்பட்டோர்  பாதிக்க பட்டுள்ளனர். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே மக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் வதந்திகள் தொடர்கின்றன. 

இந்நிலையில் பூந்தமல்லியில் கொரோனா வைரஸால் 12 பேர் இறந்து விட்டதாகவும், அதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதனுடன் ஒரு நம்பரும் குறிப்பிடபட்டிருந்தது. இதனையடுத்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அதில் கட்டுபாக்கம் பகுதியை சேர்ந்த பெஞ்ஜமின் மற்றும் சிவகுமார் வதந்தியை பரப்பியது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்து வருவதால் தங்களுக்கு லீவ் விட வேண்டும் என்பதற்காக இத்தகைய வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கபட்டது. அதனால், அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.