×

கொரோனா வைரஸ் தாக்கம்: ரயில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா
 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31 ஆம் தேதிவரை மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் சென்னையில் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில்  கொரோனா எதிரொலியால் மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50ஆக உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நடைமேடை கட்டண உயர்வு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.