×

கொரோனா வைரஸ் எதிரொலி – தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்று சந்தேகம் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதவிர 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோயாளிகள் நலன் கருதி தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். எனவே கொஞ்ச நாட்களுக்கு சாதாரண சிகிச்சைக்காக தாம்பரம் சித்த மருத்துவமனைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சித்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட நாள்தோறும் சுமார் மூன்றாயிரம் பேர் வரை இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.