×

கொரோனா வைரஸை துல்லியமாக கண்டறியும் மென்பொருள் தயார்!

886 லிருந்து 934 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மீண்டும்
 

886 லிருந்து 934 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மீண்டும் ஊரடங்கை  வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

 

இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆகவும்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ளது. 

 

தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே கொரோனா வைரஸை 30 நிமிடங்களில் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சோதனை முறையிலும் சில தொழில்நுட்ப குறைகள் இருப்பதாக தெரிகிறது. 

இந்நிலையில் கோவை பொறியியல் மாணவர்கள் ஒருவரின் எக்ஸ்ரேவை பகுப்பாய்வு செய்து சில விநாடிகளில் கொரோனா வைரஸின் பாதிப்பை துல்லியமாக கண்டறியும் மென்பொருளை  உருவாக்கி உள்ளனர்.  இதுகுறித்து கூறும் மாணவர்கள், “செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் கொரோனோ வைரஸின் தாக்கத்தை 99 புள்ளி 25 சதவீதம்  துல்லியமாக கண்டறிந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.   இந்த முறை நடைமுறைக்கு வந்தால் எளிதில் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடித்து விடலாம் என்றும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.