×

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை.. ஆனால்..!

அங்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அரியலூர் மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள அறக்கட்டளை கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (60) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். அங்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் இருந்ததால், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களை மருத்துவக் குழு, தனிமைப்படுத்துவதை போல இவரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதனால்
 

அங்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அரியலூர்  மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள அறக்கட்டளை கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி (60) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். அங்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவுடன் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர் இவருக்கு காய்ச்சல் இருந்ததால், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கொரோனா அறிகுறியுடன் வரும் நபர்களை மருத்துவக் குழு, தனிமைப்படுத்துவதை போல இவரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதனால் இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இவரது ரத்த மாதிரிகள் கடந்த 7 ஆம் தேதி பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று  பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. ஆனால், இதற்கிடையே நாராயணசாமி அவர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மருத்துவக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து  போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம், குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.