×

கொரோனா வார்டில் டிவி வசதி…தமிழக அரசு முடிவு!

எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும்
 

எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இதுவரை உலகம் முழுவதும் 12 லட்சத்து ஆயிரத்து 591பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  64,703 பேர் பலியாகி  உள்ளனர் . இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர்.  

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள்  தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உள்பட 4 ஆயிரத்து 500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தூய்மை பணியாளர்கள் நாள் கணக்கில் செய்யவேண்டிய பணியை ஒரு மணிநேரத்தில்  தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்து செய்து முடித்து விட்டனர். தமிழகத்தில் 19 அரசு மருத்துவமனைகளை கொரோனாவுக்கு  சிகிச்சை அளிக்க தேர்வு செய்துள்ளோம். கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல்,  தொலைக்காட்சி வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.