×

கொரோனா தொற்றை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம் – பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி

கொரோனா தொற்றை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம் என பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி தெரிவித்துள்ளார். சென்னை: கொரோனா தொற்றை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம் என பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று இரவு 690 ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. மேலும் வேலூர்
 

கொரோனா தொற்றை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம் என பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை: கொரோனா தொற்றை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம் என பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று இரவு 690 ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. மேலும் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றை நினைத்து யாரும் அச்சமடைய வேண்டாம் என சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ உளவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் ஏ.ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “அரசு அறிவுரைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று ஆபத்திலிருந்து நாம் முழுமையாக நாம் விடுபட முடியும். காலை அல்லது மாலை என ஏதாவது ஒருமுறை மட்டும் கொரோனா தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வதால் அதன் மீதான தேவையற்ற பயத்தை போக்க முடியும். இந்த ஊரடங்கு நேரத்தை குழந்தைகள், வயதான பெற்றோருடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொடுக்கும் வாய்ப்பாக இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர் உடற்பயிற்சி, நல்ல உணவு முறைகளை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தேவையில்லாமல் வெளியே மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழல் ஏற்படாது. பயம் இருப்பதால் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிப்போம்” என்றார்.