×

கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் வங்கியில் குவிந்த மக்கள்!

இதனிடையே வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கிகள் மூடப்பட்டன. அதே போல அரியலூரில் முன்னறிவிப்பு இல்லாமல் கடந்த மாதம் 16 ஆம் தேதி 32 வங்கிக்
 

இதனிடையே வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கிகள் மூடப்பட்டன. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கிகள் மூடப்பட்டன. 

அதே போல அரியலூரில் முன்னறிவிப்பு இல்லாமல் கடந்த மாதம் 16 ஆம் தேதி 32 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் நேற்று முன்தினம் 11 ஆம் தேதி திறக்கப்பட்டது.  ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னர் கடன் வாங்கிய விவசாயிகளின் தேதி, வங்கி மூடப்பட்ட நாட்களின் போது முடிந்ததால் அவர்கள் 3% அதிகமாக வட்டியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் தனது குழந்தைகளுடன் நீண்ட வரிசையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் காத்துக் கிடந்தனர். முன்னறிவிப்பு இல்லாமல், வங்கிகளை மூடியதால் அபராத தொகையை வாங்கக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.