×

கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி நபர் டிஸ்சார்ஜ்- பாதிப்பு இல்லாத மாவட்டமானது கோவை!

கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அவ்வப்போது குணமடைந்து வீடு திரும்பினர். அதே போல
 

கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோவை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் அவ்வப்போது குணமடைந்து வீடு திரும்பினர். அதே போல கடந்த 3 ஆம் தேதி கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். அதனைத்தொடர்ந்து, இரும்புக் கடையை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்தைக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்துள்ளார். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.