×

கொரோனா எதிரொலி: பழனி முருகன் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை! 

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாக பல கோவில்களில் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று
 

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாக பல கோவில்களில் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக  திருப்பதி ஏழுமலையான் கோவில் மலைப்பாதை மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதேபொல் பழனி திருக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றாலும் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் தவறாமல் நடைபெறும்  என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.