×

கொரோனா அச்சம்: 60% ரயில் டிக்கெட்களை ரத்து செய்த பயணிகள்

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால்
 

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வைராஸால் இந்தியாவில் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்துள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, ரயில்களில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.