×

கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைப்பு! ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், தவறாமல் அங்கிருக்கும் போட் கிளப்புக்கு சென்று படகு சவாரியும் செய்து மகிழ்வார்கள். எப்போது சென்றாலும் கல்லூரி மாணவிகளும், காதல் ஜோடிகளும், குடும்பத்துடன் குழந்தைகளுமாக கொடைக்கானலில் போட் கிளப் நிரம்பி வழியும். சீசன் காலங்களில் இரண்டு, மூன்று மணி நேரங்கள் காத்திருந்து படகு சவாரி செய்வார்கள். கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், தவறாமல் அங்கிருக்கும் போட் கிளப்புக்கு சென்று படகு சவாரியும் செய்து மகிழ்வார்கள். எப்போது சென்றாலும் கல்லூரி மாணவிகளும், காதல் ஜோடிகளும்,
 

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், தவறாமல் அங்கிருக்கும் போட் கிளப்புக்கு சென்று படகு சவாரியும் செய்து மகிழ்வார்கள். எப்போது சென்றாலும் கல்லூரி மாணவிகளும், காதல் ஜோடிகளும், குடும்பத்துடன் குழந்தைகளுமாக கொடைக்கானலில் போட் கிளப் நிரம்பி வழியும். சீசன் காலங்களில் இரண்டு, மூன்று மணி நேரங்கள் காத்திருந்து படகு சவாரி செய்வார்கள்.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், தவறாமல் அங்கிருக்கும் போட் கிளப்புக்கு சென்று படகு சவாரியும் செய்து மகிழ்வார்கள். எப்போது சென்றாலும் கல்லூரி மாணவிகளும், காதல் ஜோடிகளும், குடும்பத்துடன் குழந்தைகளுமாக கொடைக்கானலில் போட் கிளப் நிரம்பி வழியும். சீசன் காலங்களில் இரண்டு, மூன்று மணி நேரங்கள் காத்திருந்து படகு சவாரி செய்வார்கள்.
படகு சவாரி நடைபெறும் அந்த பெரிய ஏரி, கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமானது. அந்த பகுதியில் 8 செண்ட் நிலம் மட்டுமே படகு சவாரி நடத்துவதற்காக தனியார் கிளப்புக்கு 99 வருடங்களுக்கு மிக சொற்ப பணத்திற்கு லீசுக்கு கொடுத்துள்ளனர். ஆனால், அந்த கிளப் 10,000 சதுர அடிக்கும் மேல் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கொடைக்கானலைச் சோ்ந்த ஆரோக்கியசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நாம் தமிழர் கட்சியினர் இது தொடர்பாக கொடைக்கானலில் போராட்டங்களை எல்லாம் நடத்தியதை அடுத்து, இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இந்த படகு குழாமிற்கு வழங்கப்பட்ட 99 வருட ஒப்பந்த காலம் செப்டம்பர் 1 தேதியோடு முடிவடைந்து விட்டது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தொடர்ந்து படகு குழாம் நடத்தி வந்தனர். இந்நிலையில், தனது மனுவில், படகு குழாம் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுக்கு கிடைக்கும் வகையில் ஏரியில் படகு இயக்க பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும் என ஆரோக்கியசாமி தனது மனுவில்  குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்கு தடைவிதிக்கப்படுகிறது. மேலும் படகு சவாரி கட்டணத்திற்கான அறையை மூடவும், அங்குள்ள தனியார் ‘போட் கிளப்’புக்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா். இதையடுத்து கொடைக்கானல் படகு குழாம் சீல் வைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு குழாம் சீல் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.