×

‘கைதி’ படம் பார்த்த கொலைக்காரன்! படம் முடிந்ததும் கைது செய்த போலீசார்!

திருத்துறைப்பூண்டி, மருதாவனத்தில் வசித்து வருபவர் 70 வயதான காங்கிரஸ் பிரமுகர் ராமசந்திரன். இவருடைய மனைவி 65 வயதான ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் மருதாவனத்தில் வசித்து வருகையில், இவர்களது மகனும், மகளும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன் சொந்த வேலையாக கடந்த திங்கட்கிழமை காலையில் வெளியே சென்று விட்டு மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். திருத்துறைப்பூண்டி, மருதாவனத்தில் வசித்து வருபவர் 70 வயதான காங்கிரஸ் பிரமுகர் ராமசந்திரன். இவருடைய மனைவி 65 வயதான
 
திருத்துறைப்பூண்டி, மருதாவனத்தில் வசித்து வருபவர் 70 வயதான காங்கிரஸ் பிரமுகர் ராமசந்திரன். இவருடைய மனைவி 65 வயதான ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் மருதாவனத்தில் வசித்து வருகையில், இவர்களது மகனும், மகளும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன் சொந்த வேலையாக கடந்த திங்கட்கிழமை காலையில் வெளியே சென்று விட்டு மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்த ராமச்சந்திரன், தனது மனைவி ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனியாக இருந்த ராஜேஸ்வரியை யாரோ கொலை செய்து விட்டு பீரோவில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் துப்பு துலக்கத் துவங்கினர். காவல் துறையினரின் பார்வையில், வீட்டு வாசலில் கிடந்த தேய்ந்து போன ஒரு ஜோடி செருப்பு தென்பட்டது. அதைக் கைப்பற்றி விசாரணையைத் துவங்கினார்கள். விசாரணையில், அந்த செருப்பு, திருத்துறைப்பூண்டி வாளமாபுரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான முருகானந்தம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
ராமசந்திரன் வீட்டிற்கு அடிக்கடி துணிகளை வெள்ளாவியில் வைத்து வெளுத்துக் கொடுத்து விட்டு பணம் வாங்கிச் செல்வது முருகானந்தத்தின் வழக்கம். இதையறிந்த போலீசார், முருகானந்தத்தின் செல்போன் எண்ணை வைத்து முருகானந்தம் இருக்கும் இடத்தை தேடினார்கள். கொலை செய்து விட்டு, திருத்துறைப்பூண்டி எஸ்.என்.எஸ். தியேட்டரில் முருகானந்தம் கைதி படம் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
படம் முடியும் வரையில் பொறுமையாக தியேட்டர் வாசலில் காத்திருந்த போலீசார், படம் முடிந்ததும். காலில் செருப்பில்லாமல் வெளியே வந்த முருகானந்தத்தை பிடித்து விசாரித்த போது கொலைக்கான காரணம் வெளியே வந்தது.