×

குழந்தை பிறந்து இரண்டே வாரங்களில் தாய் மரணம் : அரசு மருத்துவமனை சிகிச்சை தான் காரணமா?!

இரண்டு வாரங்கள் கழித்து, தீபா அறுவை சிகிச்சை செய்த தையலைப் பிரிப்பதற்காக தொட்டப்பநாயக்கனூர் ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளார். மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூரில் கார்த்திக்- தீபா தம்பதி வசித்து வந்துள்ளனர். கர்ப்பிணியான தீபாவுக்கு கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தீபாவுக்கு இரண்டாவது குழந்தை. இரண்டு வாரங்கள் கழித்து, தீபா அறுவை சிகிச்சை செய்த தையலைப் பிரிப்பதற்காக தொட்டப்பநாயக்கனூர் ஆரம்பச் சுகாதார நிலையம்
 

இரண்டு வாரங்கள் கழித்து, தீபா அறுவை சிகிச்சை செய்த தையலைப் பிரிப்பதற்காக தொட்டப்பநாயக்கனூர் ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூரில் கார்த்திக்- தீபா தம்பதி வசித்து வந்துள்ளனர். கர்ப்பிணியான தீபாவுக்கு கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தீபாவுக்கு இரண்டாவது குழந்தை. இரண்டு வாரங்கள் கழித்து, தீபா அறுவை சிகிச்சை செய்த தையலைப் பிரிப்பதற்காக தொட்டப்பநாயக்கனூர் ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தையல் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின், வீட்டிற்குச் சென்ற தீபாவுக்கு மயக்கம் வந்துள்ளது. 

சாதாரண மயக்கம் என்று எண்ணி, தொட்டப்பநாயக்கனூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திலேயே முதலுதவி செய்துள்ளனர். ஆனால், தீபாவுக்கு மயக்கம் சற்றும் தெளியாததால் அவரை  உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குழந்தை பிறந்து 2 வாரங்களாக நலமாக இருந்த தீபா, தையலைப் பிரிக்கச் சென்ற போது உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிறந்து இரண்டே வாரங்கள் ஆன பச்சிளங்குழந்தையின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து, தீபாவின் கணவர் உசிலம்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 2 வாரமாக நலமாக இருந்த தீபா ஏன் திடீரென உயிரிழந்தார்? அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சையில் ஏதேனும் தவறு நடந்ததா ? தீபாவுக்கு ஏற்கனவே, ஏதேனும் உடலில் பிரச்னை இருந்துள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.