×

குருப்பெயர்ச்சி விழா 2018 : பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் மூலவர்,உற்சவர் மற்றும் கோபுரத்திற்கு ஒரே நேரத்தில் தீபாராதனை!

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தனர். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமான பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருகோயில்.இக்கோயிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான குருப்பெயர்ச்சி விழா கடந்த 1 ஆம் தேதி
 

பட்டமங்கலம்  தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமான பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருகோயில்.இக்கோயிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

இந்தாண்டிற்கான குருப்பெயர்ச்சி விழா கடந்த 1 ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நேற்று இரவு 10.02 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கியுடன் காட்சி அளித்தார்.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. இதைதொடர்ந்து உற்சவர், 6 கார்த்திகை பெண்கள், 4 முனிவர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியான நேரத்தில் மூலவர், உற்சவர் மற்றும் கோபுரம் ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நேற்று நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.